wibiya widget

Vettaikaran Result

Monday, December 21, 2009

3.5 Stars out of 5

THALAIVAR PASS PANNITAAR DOI...............

Vettaikaran's record

Saturday, December 19, 2009

சென்னை : சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ‘வேட்டைக்காரன்’ படம் தமிழ் சினிமா வரலாற்றில் வசூல் சாதனை படைத்துள்ளது.
ஏவி.எம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள படம் ‘வேட்டைக்காரன்’. விஜய், அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். பாபு சிவன் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீசானது. எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு இதற்கு 600 பிரிண்டுகள் போடப்பட்டன. தமிழில் இவ்வளவு பிரிண்ட் போடப்பட்டு எந்த படமும் வெளியானதில்லை. திரையிட்ட அனைத்து பகுதியிலும் முதல் காட்சியிலேயே வரலாறு காணாத ரசிகர்கள் கூட்டம் காணப்பட்டது. அதே நேரம், வசூலிலும் இப்படம் பெரிய சாதனை படைத்துள்ளது.
இதுபற்றி சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறும்போது, ‘‘சென்னை நகரம், சேலம் பகுதியில் இப்படத்தை நான் விநியோகித்துள்ளேன். முதல் நாளிலேயே பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை வசூல் சாதனை படைத்துள்ள படங்களை எல்லாம் ‘வேட்டைக்காரன்’ தாண்டும். அபிராமி தியேட்டரில் முதலில் இரண்டு தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்தோம். வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்துவிட்டு இன்னுமொரு தியேட்டரில் ரிலீஸ் செய்துள்ளோம்‘’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் கூறும்போது, ‘‘விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய ஓபனிங்கை எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் திரையிட்டும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. வசூலில் இப்படம் புதிய சாதனையை படைக்கும்’’ என்றார்.
விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறும்போது, ‘‘கோவை பகுதியில் எந்த படத்துக்கும் 58 தியேட்டர்களில் ரிலீஸ் செய்தது இல்லை. ‘வேட்டைக்காரன்’ அந்த சாதனையை செய்திருக்கிறது. முதல் நாள் வசூல் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. இப்படியொரு ஓபனிங் எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை’’ என்றார்.

Vettaikaran Trailer 6

Wednesday, December 16, 2009
Naan Adicha Thaanga maata .......... Naalu maasam thoonga maata .......... modhi paaru veedu poai sera maata........



Unakku ellam police kaaran pathaathuda........... vera ....... vera........vera........ vettaikaran thaanda venum..........

Vettaikaran 16.12.2009




Vettaikaran Lyrics Song 3

Saturday, December 12, 2009
புலி உறுமுது புலி உறுமுது


புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வாறன் பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

யார் இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூறு இவன்
இருபது நகங்களும் கழுகிடா
இவன் இருப்பதே உலகிக்கு அழகிடா
அடங்க மறுத்த உன்னை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மூண்டு தரம் குழிச்சுடுவான்
இவனோட நாயம் தனி நாயம்
அட இவனால அடங்கும் அநிநாயம்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

அச தோமா சக் கமைய தம சோம ஜோதி கமைய வித் ஜோம அமிர்தம் கமய ஓம் சாந்தி சாந்திகி

யார் இவன் யார் இவன் யார் இவன் ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடி வாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரு மூஞ்சி சேய் எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்
போடு அடிய போடு போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்

நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வாறன் பாரு வேட்டைக்காரன்

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

Vettaikaran Lyrics Song 2

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண் : என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய வார்தைகள் எல்லாம் கவிதைகலாய் மாறும்

பெண் : உன் தெரு பாத்தாலே என் கண்கள் அலை மோதும் உன் வாசல் தேடி போகச் சொல்லி கெஞ்சுது என் பாதம்..

ஆண் : என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள் ...

பெண் : உன்னாலே என் வீட்டின் சுவறேல்லாம் ஜன்னல்கள்..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுகும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும் மொச்சத்தினை சேரும் ..

பெண் : அனுமதி கேட்காமல் உன் கண்கள் என்னை மேயும் நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம் நொடியில் குடை சாயும்

ஆண் : உன் கைகள் கோக்காமல் பயணங்கள் கிடையாது ...

பெண் : உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை பொய் தான் என்பதா
என் தேகம் முழுவதும் ஒரு விண் மீன் கூட்டம் மொய்கின்றதே

பெண் : என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே ....
என் காட்டு பாதையில் நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே..

ஆண் : ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

Vettaikaran Lyrics Song 1

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா


நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

ஏய் வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு
வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு

வாழு வாழு வாழ விடு வாழும் போதே வானை தோடு
வம்பு பண்னா வாளை எடு வணங்கி நின்னா தோளை தோடு

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

உணவு உடை இருப்பிடம் உழவனுக்கும் கிடைக்கும்
அவன் அனுபவிச்ச மிச்சம் தான் ஆண்டவனுக்கு படைக்கனும்

ஆல மர பள்ளிகூடம் ஒக்ஸ்போட மாறனும் நீ தாய் மொழியில் கல்வி கற்று தமிழ் நாட்டை உயர்த்தனும்

வாய் மூடி வாழதே.....
வீண் பேச்சு பேசாதே...

காலம் கடந்து போச்சுதுன்னு கவலைப் பட்டு ஏங்காதே
கனவு ஜெய்க்க வேணுமுனா கண்ணை மூடி தூங்காதே

குத்துங்கடா குத்து என் கூட சேந்து குத்து.....

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

வறட்டி தட்டும் சுவத்தில வேட்பாளர் முகமடா
காத்திருந்து வேட்டு போட்டு கறுத்து போச்சு நகமடா
புள்ளை தூங்குது இடுப்பில பூனை தூங்குது அடுப்பில நம்ம நாட்டு நடப்பில யாரு இதை தடுக்கல

தாய் பேச்சை மீறாதே...
தீயோர் சொல் கேட்காதே...

ஏதோ நானும் சொல்லி புட்டேன் ஏத்துகிட்டா ஏத்துகோ சொன்னதெல்லாம் உண்மையினா உன்னை நீயே மாத்திக்கோ

குத்துங்கடா குத்து ஏழுறு கேக்க குத்து.....

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

நான் புடிச்சா உடும்பு புடி நான் சிரிச்சா வான வெடி
நான் பாடும் பாட்டுக்கு தோல் பறை நீயடி

நான் அடிச்சா தாங்க மாட்டா நாலு மாசம் தூங்க மாட்டா மோதி பாரு வீடு போய் சேர மாட்டா

Vettaikaran Trailer 5

Enn uchi mandaiyila surrunguthu.........

Vijay Rocks...




Vettai Aarambam Aayidichi doi.............

Sura New Stills

Thursday, December 10, 2009





Newly & Lovely Stills









Vettaikaran Mass Stills












Vettaikaran Trailer 4

2012

Wednesday, December 9, 2009

உலகம் இப்படித்தான் அழியும். அதில் இவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்கள்... எனும் ஆரூடம் சொல்லி உலக அழிவின் ஒரு முன்னோட்டம் போல் அலறடிக்கும் படம்தான் ருத்ரம் (2012).

தன் இந்திய வான் இயற்பியல் நண்பர் மூலம் 2012ம் ஆண்டில் உலகம் அழிந்து விடும் என்பதை அறியும் அமெரிக்க இளம் விஞ்ஞானி, தன் அதிபரை உஷார் படுத்தி உலக நாட்டு தலைவர்களை எல்லாம் காக்கும் முயற்சியில் இறங்குகிறார். உலக தலைவர்களுடன் அதிகார வர்க்கமும் பணக்கார வர்க்கமும் அவர்கள் தயாரித்திருக்கும் அநு்த பாதுகாப்பு களத்திற்குள்ளும், வளையத்திற்குள்ளும் வந்து தப்பிக்க முயற்சிப்பதை கண்டு கடுப்பாகும் விஞ்ஞானி, அந்த பாதுகாப்பு களத்திற்குள் அதை உருவாக்க பாடுபட்ட சாமானியர்களுக்கும் இடம் அளிக்க வேண்டுமென்று கொடி பிடிக்கிறார். அந்த கடைசி கட்ட முயற்சியினால் அகிலத்தையே விழுங்க நினைக்கும் கடலுக்குள் நிற்கும் அந்த களத்தில் மூல கோளாறுகள்ஏற்பட, அந்த ராட்சத கப்பல் களத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதனால் அந்த களத்திற்கே ஆபத்து. அதில் இருந்து எப்படி மீண்டு, இன்னும் சில பாதுகாப்பு களங்களுடன் எப்படி இணைந்து உலக பேரழிவில் இருந்து தப்பித்தனர் என்பது க்ளைமாக்ஸ்.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகள்தான் மயிர் கூச்செரியும்படி இருக்கும். ஆனால் 2012 படத்தின் ஆரம்ப காட்சிகள் முதலே பிரமாண்டமும், பில்டப்களும்தான். வானுயர்ந்த கட்டிடங்கள், பிரமாண்ட மேம்பாலங்கள்எல்லாம் இடிந்து விழுவதும், பற்றி எரிவதும், அதனூடே ஒரு காரிலும், அதன் பின் குட்டி விமானத்திலும் ஒரு சாமான்ய குடும்பம் தப்பி பிழைத்து ஓடுவது, எரிமலை வெடித்து சிதறுவது, பணிமழையில் விமானம் விழுந்து நொறுங்குவதும், அதில் இருந்து சிலர் காரில் தப்பிப்பது, சுனாமி பேரலையில் உலகமே தத்தளிப்பது உள்ளிட்ட இன்னும் பல காட்சிகள் அடுத்தடுத்து படம் முழுக்க பரவிக் கிடப்பதும், அது கிராபிக்ஸ் எனும் எண்ணம் எள்அளவும் எழுந்து விடாவண்ணம் இயக்குனரும், பிற டெக்னீசியன்களும் பாடுபட்டிருப்பதும் ஏதோ, உலகம் நம் காலடியில் கைநழுவவுது மாதிரி படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தி விடுகிறது.

இந்தியா, சீனா, அமெரிக்கா என படம் பயணிக்காத இடமே இல்லை என்பதுபோல், உலகம் முழுக்க படமாக்‌கப்பட்டிருக்கும் காட்சிகளில் சென்டிமெண்ட் சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை.

காட்ஸில்லா, இன்டிபென்டன்ஸ் டே, த டே ஆப்டர் டுமாரோ உள்ளி்ட்ட ஹாலிவுட் பிரமாண்ட படங்கள் இயக்கிய ரோலண்ட எம்மரிச்சின் படமாயிற்றே... உலக அழிவிற்கும் பயமுறுத்தலுக்கும் கேட்கவா வேண்டும்?!

ருத்ரம் : கோர தாண்டவம்!

Renigunda


தடி எடுத்தவன் அதில் அடி பட்டுத்தான் சாவான்., கத்தி எடுத்தவன் குத்துப் பட்டுத்தான் சாவான்... எனும் பழமொழிகளை மெய்ப்பிக்கும்வ விதமாக வித்தியாசமும், விறுவிறுப்பும் கலந்து கட்டி வெளிவந்திருக்கும் படம்தான் ரேனிகுண்டா.

கதைப்படி, படிப்பு வரவில்லை என்றால் பரவாயில்லை... நம்ம பரம்பரையில் அவன் பத்தாவது வரைக்கும் பெயிலாகாமல் படிக்கிறானே என கொஞ்சும் தந்தையையும், அரை மணி நேரம் காணவில்லை எனில், மகனை அடுப்பங்கரையில் தொடங்கி அடுத்தடுத்த தெருக்கள் வரை தேடி அலையும் பாசமிகு தா‌யையும் தன் கண் எதிரே கொன்றவனை பழி்க்குப் பழி வாங்க கத்தியை தூக்குகிறார் ஹீரோ. முதல் அட்டம்ப்ட் பெயில். அதனால், ஜெயில்... என்றாலும், ஜெயிலில் தன்னை காவலர்களின் அடாவடி கெடுபிடிகளில் இருந்து காபந்து செய்யும் தன் வயதை ஒத்த நான்கு இளைஞர்களுடன் (ஒவ்வொருத்தருக்கும் இரண்டு கொலை கேஸ், நான்கு கொலை முயற்சி கேஸ்கள், ஐந்தாறு கொள்ளை வழக்குள் உண்டென்பது பின்குறிப்பு) சேர்ந்து கொண்டு ஜெயிலில் இருந்து தப்பித்து, தன் தந்தையையும், தாயையும் கார் ஏற்றி கொன்ற லோக்கல் தாதாவை நடுரோட்டில் வைத்து தீர்த்துக் கட்டுகிறார் ஹீரோ. அப்புறம்..? அப்புறமென்ன... அந்த நால்வர் கூட்டணியுடன் ஐவராக மும்பைக்கு போய் பெரிய தாதாவாக கிளம்பும் ஹீரோ, ரெயிலில் டி.டி.ஆருடன் ஏற்படும் பிரச்னையால் வழியில் ஆந்திரா ரேனிகுண்டாவிலேயே இறங்கி ஓட வேண்டிய சூழல். அங்கு ஐவர் கோஷ்டி தங்களது சிறைத் தோழன் பங்கரை எதிர்பாராமல் சந்திக்க, மும்பை பிளான் மூட்டை கட்டப்பட்டு ரேனிகுண்டாவிலேயே பங்கர் கை காட்டும் பார்ட்டிகளை பஞ்சர் பண்ணி, துட்டும், சுகமும் பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஹீரோ சக்தியின் கண்ணில் படுகிறார் ஹீரோயின் சனுஷா. வாய் பேச முடியாதவள் என்றாலும் கண்ணால் பேசுகிறார்...! அதுவும் காதல் மொழி பேசுகிறாள்...! இவர்களது காதல் அந்த கோஷ்டிக்குள் பூசலை கிளப்பும் என்று பார்த்தால், அட... அவர்களே பங்கர் சொல்லும் அடுத்த அசைன்மெண்ட்டை முடித்ததும் சக்திக்கும், சனுஷாவிற்கும் திருமணம் செய்து வைக்க சம்மதம் சொல்கின்றனர். சரி... சனுஷாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என எண்ணினால்... ஹீரோ சக்தியின் ஒழுக்கத்தை அவர்கள் ரேனிகுண்டா வந்த முதல் நாளிலேயே அறிந்து கொள்ளும் சனுஷாவின் அக்கா, டபுள் ஓ.கே., சொல்லி விடுகிறார். இப்படி இரு தரப்பும் சம்மதம் தர., விதி தரப்பு வேலை செய்வதுதான் மீதிக் கதையும், இறுதி இரண்டு ரீல் படமும்!

ஹீரோ சக்தியாக புதுமுகம் ஜானி... நடிப்பு வாவ்! அமைதியாகவே முகத்தை வைத்துக் கொண்டு, காதலையும், ஆக்ரோஷத்தையும் காட்டி அசத்தியிருக்கிறார். (நடிகர் அஜித்தின் நண்பரும் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.சக்கரவர்த்தியின் வாரிசாம் ஜானி). பேஷ். பேஷ். சக்தி மாதிரியே அவரது கொலைகார நண்பர்கள் பாண்டு, டப்பா, மாரி, மைக்கேல் நால்வரும் நச்சென்று நடித்திருக்கின்றனர்.

கண்களாலேயே காதல் பேசும் ஹீரோயின் சனுஷாவும், உடம்பால் பேசும் அவரது அக்கா கேரக்டர் சஞ்சனா சிங்கும் பிரமாதம். கண்ணீரும், கம்பலையுமாக இவர்களது பின்னணி கடையோடு ஒட்டி, உறவாடும் போது காண்போர் கண்களிலும் நீர். சிறைக் கொடுமைகளையும், இளம் குற்றவாளிகள் உருவாகும் விதத்தையும் விபச்சாரிகளின் குடும்ப பின்னணியையும், அவர்களது மனநிலையையும் இதைவிட அழகாக வேறு யாராலும் படம் பிடிக்க முடியாது என்றே இயக்குனர் பன்னீர் செல்வத்தை பாராட்டலாம். லிங்குசாமியின் சீடராம். குருவையே மிஞ்சினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

புதியவர்கள் கணேஷ் ராகவேந்திராவின் மிரட்டும் இசையும், சக்தியின் ஒளிப்பதிவும் நம் கண்முன் ஒவ்வொரு கொடூரமும் அரங்கேறுவது போல் காட்டி பயமுறுத்துகின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பும் படத்திற்கு பெரும் பலம்.

ஒத்தப்பாட்டுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் ரிஷா, மெயின் வில்லன் சர்தாராக நடித்திருக்கும் கேப்டன் கணேஷ், கொலை புரோக்‌கர் பங்கராக நடித்திருக்கும் ஸ்டில்ஸ் விஜய் (இவர் பிரபல சினிமா புகைப்பட கலைஞர்),‌ கொடூர இன்‌‌ஸ்பெக்டர் கொடுக்கு ராதாகிருஷ்ணனாக நடித்திருக்கும் நந்தா சரவணன், மனைவி சஞ்சனா சிங்கையே தொழிலுக்கு அழைத்து செல்லும் பொம்‌பளை புரோக்கராக வரும் அந்த ஆட்‌டோ டிரைவர், ஹீரோவின் அப்பா சேதுபதியாக வரும் இளங்கோ, தாய் தெய்வானையாக வரும் சுஜாதா உள்ளிட்ட எல்லோரும், ஒருசில பிரேம்களில் வந்தாலும் சரி... பல பிரேம்களில் வந்தாலும் சரி... உயிரைக் கொடுத்து நடித்து படத்தை தூக்கி நிறுத்துகின்றனர்.

பங்கர் சொன்ன ஒரு பார்ட்டியை பொட்டல் வெளியில் தீர்த்து கட்டி விட்டு, இவர்களை நம்பாத பங்கரிடம் அவரை எப்படி தீர்த்துக் கட்டி‌னோம் என பங்கரை சாம்பிளாக வைத்து இந்த ஐவர் கூட்டணி செய்து காட்டும் ஒரு காட்சி போதும் இயக்குனரின் திறமையை எடுத்துரைக்க. நல்லவேளை... இது மாதிரி இளம் குண்டர்களுக்கு கூட இளம் வயதிலேயே சமாதி எனும் நியதியை இறுதியில் சொல்லி நம்மூர் இளைஞர்களை சமூக அக்கறையுடன் காப்பாற்றி சபாஷ் வாங்கி விடுகிறார் இயக்குனர். இல்லை என்றால் இந்த படம் பார்த்து எத்தனை பள்ளி மாணவர்கள் படுபாதக செயல்களில் இறங்குவார்களோ தெரியாது! அத்தனை கொடூரம்... ஆனால் அத்தனையும் நிஜம் என்பது நிதர்சனம்.

மொத்தத்தில் சில சினிமாத்தனங்களை தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல நடிப்பு, நல்ல நடிகர்கள் தேர்வு, நல்ல இசை, நல்ல ஒளிப்பதிவு, நல்ல படத்தொகுப்பு, நல்ல கதை, திரைக்கதை, இயக்ககம் என அத்தனையிலும் முன்னணியில் இருக்கும் ரேனிகுண்டா, இளம் குண்டர்களின் கதையை சொன்னாலும், எடுத்துக் கொண்ட களத்தில் தங்க வைர குண்டானாக ஜொலித்திருக்கிறது.

குண்டர் சட்டத்தில் போட வேண்டிய இளம் குண்டர்களின் கதை சொன்னாலும் ரேனிகுண்டா : தக தக தங்க குண்டான் போல மின்னுகிறது.

Yogi


பால்ய காலம் முதலே பாசம் என்பதை அனுபவித்தறியாத தாதாவிடம் பச்சைக் குழந்தை கிடைத்தால் எப்படி இருக்கும் ? ரவுடித் தொழிலை மறந்து குழந்தையிடம் அன்பு தேடுகிறான் யோகி. சிகரெட் பிடித்தபடி எப்போதும் சோகமாகவே தெரிகிறார் அமீர். பல படங்களில் பார்த்துச் சலித்த வழக்கமான தாதா கேரக்டர்தான்

இதிலும். அமீருக்கான ஸ்பெஷல்னு கதையில் புதிதாய் எதுவும் தெரியவில்லை. லோக்கல் தாதாவிடம் அமீர் முறைத்துக் கொள்வதும், குழந்தையை குஷிப்படுத்த ரஜினி மாதிரி ஆட்டம் போடுவதும் வெகு அழகு. ஆனால், ஒரேயொரு கொலை, சில பல திருட்டுக்களைச் செய்து விட்டு "" குழந்தைக்காக எல்லாத்தையும் விடுகிறேன்'' ன்னு அவர் சொல்வதெல்லாம் தாதாவுக்குப் பொருந்தாத கம்பீரம்.

சோகமான காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கும் என டைரக்டருக்கு யாரோ தவறாகச் சொல்லிட்டாங்க போல. அமீரின் சிறுவயது ஃப்ளாஷ்பேக் ரசிக்கும்படியாக இல்லை. மதுமிதாவின் கேரக்டரும் அப்படியே.

மதுமிதா ஆந்திராப் பெண், பொம்மை விற்கிறாள் என்பதெல்லாம் சுவாரஸ்யமாக இருந்தாலும் அமீருடன் அவர் வந்து போகும் காட்சிகளும், பணம் வாங்கிக்கொண்டு குழந்தைக்குப் பால் கொடுப்பதும் மனதில் ஒட்டவில்லை.

சுவாதியின் குழந்தை சந்தர்ப்பவசத்தால் கடத்தப்படுவது நல்ல திருப்பம்தான். ஆனால், கூலிப்படை வைத்து வின்சென்ட் அசோகன் அந்தக் குழந்தையைக் கொல்ல முயல்வதெல்லாம் போரடிக்கும் சமாச்சாரம். அமீருடன் மெட்ராஸ் பாஷை பேசிக் கொண்டு வருகிற அந்த இரண்டு பேரும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள். கவிஞர் சினேகனா அது ? பேட்டை ரவுடியா நல்லாவே நடிச்சுருக்காருப்பா.

யுவனின் "சீர்மேவும் கூவத்திலே....'' பாட்டு இளைஞர்களின் ஃபேவரைட். பின்னணி இசையிலும் சரவெடி வெடித்திருக்கிறார். குருதேவ்-தேவராஜ் ஒளிப்பதிவு படத்துக்குப் பக்கபலம்.

க்ளைமாக்ஸில் ""வாடா... வாடா...'' என திமிறிக்கொண்டு எதிரிகளை அமீர் பந்தாடுவது அலுப்பாக இருக்கிறது. படம் முழுக்கவே சில ஆங்கிலப் படங்களை நினைவூட்டுவதுபோல காட்சியமைப்புகள்.தவிர்த்திருக்கலாமே ஸார் ?

Naan Avan Illai


நான் அவன் இல்லை பாகம் 1-ல் உள்ளூரில் நான்கைந்து பெண்களை ஏமாற்றிய ஜீவன் இந்த பாகம் 2ல் வெளிநாட்டு வாழ் இந்திய பெண்களையும், வெள்ளைக்காரப் பெண் ஒருவரையும் இயற்கை எழில் கொஞ்சும் வெளிநாடுகளிலேயே ஏமாற்றுவதும், அவ்வாறு ஏமாற்றிய காசு, பணத்தில்வெளிநாட்டு வாழ் இலங்கை தமிழர் சங்கீதாவின் குழந்தையை அவருடன் சேர்த்து வைப்பதும்தான் கதை. பழைய நான் அவன் இல்லை கதையேதான். அதை எவ்வளவு புதுசாகவும், பெரிசாகவும் சொல்ல முடியுமோ... அவ்வளவு பெரிசாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி சபாஷ் வாங்கி விடுகின்றனர்.

நாயகர் ஜீவன் நிஜமாகவே மச்சக்காரர்தான். லட்சுமிராய், ஸ்வேதா மேனன், ஸ்ருதி, ரக்ஷனா உள்ளிட்ட நான்கு நாயகிகளிடம் சும்மா புகுந்து விளையாடினாலும், சங்கீதாவின் குழந்தை பாசத்திற்கு விடை கண்டு நம்மையும், சல்கீதாவையும் நெகிழ வைக்கிறார். ஜீவனின் நடிப்பு - துடிப்பு எல்லாவற்றிலும் முந்தைய படங்களைக் காட்டிலும் நல்ல முன்னேற்றம்.

தாய் நாட்டு ஏக்கத்திலும், தாய் பாசத்திலும் சங்கீதா நம்மை நெகிழ வைக்கிறார். சபாஷ்! சரியான தேர்வு! உலகத்தில் உள்ள நாடுகளில் எல்லாம் இடம் வாங்கிப் போடத் துடிக்கும் லட்சுமி ராய், தனது அம்மாவிற்கு, அப்பா தலையாட்டி பொம்மையாக வாழ்வதுபோல தனக்கும் தகுந்த தலையாட்டி புருஷனைத் தேடி ஜீவனிடம் ஏமாறும் ஸ்ருதி, வைரக் கல்லுக்கு ஆசைப்பட்டு அலையும் ஸ்வேதா மேனன், ஜீவனால் சாமியாராகி விடும் வெள்ளைக்காரி ரக்ஷனா உள்ளிட்ட நான்கு நாயகியரும் நான்கு விதவிதமான பிரமாண்டம்... கவர்ச்சி பாண்டம். ரசிகர்களின் நாடித்துடிப்பு அறிந்து அவர்களை சரியாக பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செல்வா.

மாமா புஜ்ஜிபாபுவாக ஜீவனுக்கு உதவ ஆரம்பிக்கும் மயில்சாமி வரும் ஒவ்வொரு இடமும் செம காமடி சரவெடி!

இப்படத்திற்கு டி.இமானின் பாடல்கள் இசையும் சரி, பின்னணி இசையும் சரி... இளையராஜா மாதிரி இதம், பதம்! பட்டுக் கோட்டை பிரபாகரின் வசனம், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பு, பி.பாலமுருகனின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் செல்வாவின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு மணிமகுடம் வைத்தது போல் உள்ளன. சபாஷ்! குறிப்பாக ஒளிப்பதிபாளர் பி.பாலமுருகன் வெளிநாட்டு லொகேஷன்களின் நான்கு நாயகியரையும் அழகாக செதுக்கி செதுக்கி படம் பிடித்து காட்டியிருப்பது கண்களுக்கு குளிர்ச்சி.

மொத்தத்தில் நான் அவன் இல்லை இரண்டாம் பாகம், மூன்றாம் பாகத்தையும் பார்க்கும் எதிர்பார்ப்பை இப்பொழுதே தூண்டி விட்டுள்ள டிரண்ட்.

நான் அவன் இல்லை 2 பார்த்தால் நாம் நாமாக இல்லை!

Vettaikaran New Images

Monday, December 7, 2009





Vettaikaran' Record


Vijay’s mega budget action extravaganza Vettaikaran rights, has now been sold at a new record price for Kerala and Karnataka.

In Kerala the film has been sold at a record price and it is a new record for a Vijay film. Vettaikaran is releasing world wide on December 18 and in kerala alone it is opening in nearly 75 screens.

Vettaikaran features Vijay and Anoushka in lead roles, it is being directed by Babu Sivan. The movie distribution rights have been aquired by Sun pictures and it has started a massive promo on all it channels from December 1st.

Vettaikaran Trailer 3

Saturday, December 5, 2009

Super Stars

Vettaikaran New Trailor

Thursday, December 3, 2009


Vettaikaran Trailor 2

SmS Anupchi Gaali Pandrathuku Vijay Onnum 'Thala' Illada Malai 'Thirumalai'

Smart Vijay

Saturday, November 28, 2009

Vettaikaran's New Still

Sura


Smart Vijay

Vijay's New Hair Style


Enjoy Vijay Fans.........

Vijay's Brother Marriage

Wednesday, November 25, 2009




Followers