
விஜய் தற்போது சுறா படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 50வது படம். இதையடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
ஜெயம் ராஜாவிடம் கதை கேட்ட விஜய், கண்டிப்பாக படம் பண்ணுவோம் என அவரிடம் உறுதி அளித்திருந்தார். 49வது படமான வேட்டைக்காரன் தொடங்கிய போதே உறுதி செய்யப்பட்ட விஷயம் இது.
இந்நிலையில் லிங்குசாமியும் விஜய்க்காக கதை தயார் செய்து வைத்திருக்கிறார். விஜய் கால்ஷீட் கொடுத்தால் பையாவுக்குப் பிறகு விஜய் படத்தை இயக்கலாம் என்பது லிங்குசாமியின் எண்ணம்.
ஆனால், முன்பே திட்டமிட்டபடி ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிப்பதென்று விஜய் முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
படத்துக்கு இசையமைக்க பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. என்றாலும் தரணின் பெயர்தான் விஜய்யின் சாய்ஸாம். ஈரம் படத்தில் தரணின் இசை விஜய்க்கு பிடித்திருந்ததுதான் இதற்கு காரணமாம்.
0 comments:
Post a Comment