wibiya widget

2012

Wednesday, December 9, 2009

உலகம் இப்படித்தான் அழியும். அதில் இவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்கள்... எனும் ஆரூடம் சொல்லி உலக அழிவின் ஒரு முன்னோட்டம் போல் அலறடிக்கும் படம்தான் ருத்ரம் (2012).

தன் இந்திய வான் இயற்பியல் நண்பர் மூலம் 2012ம் ஆண்டில் உலகம் அழிந்து விடும் என்பதை அறியும் அமெரிக்க இளம் விஞ்ஞானி, தன் அதிபரை உஷார் படுத்தி உலக நாட்டு தலைவர்களை எல்லாம் காக்கும் முயற்சியில் இறங்குகிறார். உலக தலைவர்களுடன் அதிகார வர்க்கமும் பணக்கார வர்க்கமும் அவர்கள் தயாரித்திருக்கும் அநு்த பாதுகாப்பு களத்திற்குள்ளும், வளையத்திற்குள்ளும் வந்து தப்பிக்க முயற்சிப்பதை கண்டு கடுப்பாகும் விஞ்ஞானி, அந்த பாதுகாப்பு களத்திற்குள் அதை உருவாக்க பாடுபட்ட சாமானியர்களுக்கும் இடம் அளிக்க வேண்டுமென்று கொடி பிடிக்கிறார். அந்த கடைசி கட்ட முயற்சியினால் அகிலத்தையே விழுங்க நினைக்கும் கடலுக்குள் நிற்கும் அந்த களத்தில் மூல கோளாறுகள்ஏற்பட, அந்த ராட்சத கப்பல் களத்தில் தண்ணீர் புகுந்து விடுகிறது. அதனால் அந்த களத்திற்கே ஆபத்து. அதில் இருந்து எப்படி மீண்டு, இன்னும் சில பாதுகாப்பு களங்களுடன் எப்படி இணைந்து உலக பேரழிவில் இருந்து தப்பித்தனர் என்பது க்ளைமாக்ஸ்.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகள்தான் மயிர் கூச்செரியும்படி இருக்கும். ஆனால் 2012 படத்தின் ஆரம்ப காட்சிகள் முதலே பிரமாண்டமும், பில்டப்களும்தான். வானுயர்ந்த கட்டிடங்கள், பிரமாண்ட மேம்பாலங்கள்எல்லாம் இடிந்து விழுவதும், பற்றி எரிவதும், அதனூடே ஒரு காரிலும், அதன் பின் குட்டி விமானத்திலும் ஒரு சாமான்ய குடும்பம் தப்பி பிழைத்து ஓடுவது, எரிமலை வெடித்து சிதறுவது, பணிமழையில் விமானம் விழுந்து நொறுங்குவதும், அதில் இருந்து சிலர் காரில் தப்பிப்பது, சுனாமி பேரலையில் உலகமே தத்தளிப்பது உள்ளிட்ட இன்னும் பல காட்சிகள் அடுத்தடுத்து படம் முழுக்க பரவிக் கிடப்பதும், அது கிராபிக்ஸ் எனும் எண்ணம் எள்அளவும் எழுந்து விடாவண்ணம் இயக்குனரும், பிற டெக்னீசியன்களும் பாடுபட்டிருப்பதும் ஏதோ, உலகம் நம் காலடியில் கைநழுவவுது மாதிரி படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தி விடுகிறது.

இந்தியா, சீனா, அமெரிக்கா என படம் பயணிக்காத இடமே இல்லை என்பதுபோல், உலகம் முழுக்க படமாக்‌கப்பட்டிருக்கும் காட்சிகளில் சென்டிமெண்ட் சமாச்சாரங்களுக்கும் பஞ்சமில்லை.

காட்ஸில்லா, இன்டிபென்டன்ஸ் டே, த டே ஆப்டர் டுமாரோ உள்ளி்ட்ட ஹாலிவுட் பிரமாண்ட படங்கள் இயக்கிய ரோலண்ட எம்மரிச்சின் படமாயிற்றே... உலக அழிவிற்கும் பயமுறுத்தலுக்கும் கேட்கவா வேண்டும்?!

ருத்ரம் : கோர தாண்டவம்!

0 comments:

Post a Comment

Followers