wibiya widget

Kandhasamy

Friday, October 30, 2009

ஓர் அரசாங்க ஆசாமி, ஏழைகளின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சாமி அவதாரம் எடுத்தால் அவர்தான்..."கந்தசாமி!''

திருப்போரூர் கந்தசாமி கோயில் மரத்தில் தங்களுடைய பிரச்னைகளைச் சீட்டில் எழுதி வைத்தால், வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன. நிறைவேற்றுவது சிபிஐயின் பொருளாதாரக் குற்றப் பிரிவு எஸ்.பி.விக்ரம். அதற்கு அவருக்குக் கைகொடுப்பது பெரும்புள்ளிகளிடம் பதுங்கி இருக்கும் கருப்புப்பணம். தன் தந்தையின் சொத்தை முடக்கியதால் விக்ரமைப் பழிவாங்க, அவரைக் காதலிப்பது போல நடிக்கிறார் ஸ்ரேயா. அப்போது ""வரம் கொடுக்கும் கந்தசாமி'' விக்ரம் என்ற ஆசாமிதான் என்பதைக் கண்டுபிடிக்கிறார். இன்னொரு பக்கம், ""கந்தசாமி யார் ?'' என்று கண்டுபிடிக்க துப்பறியும் உளவுத்துறை போலீஸ் பிரபுவும் விக்ரமை நெருங்குகிறார். வில்லன் கோஷ்டியினர் விக்ரமின் உயிருக்குப் பொறி வைத்து காத்திருக்கிறார்கள்.

"விக்ரம் உயிர் தப்பினாரா? ஸ்ரேயாவை காதலித்தாரா? வில்லன்களின் கொட்டத்தை அடக்கினாரா? ஏழைகளின் துயர் துடைத்தாரா?'' என எக்குத் தப்பு கேள்விகளுக்கு மூன்று மணி நேரம் நேரத்துக்கும் மேலாக பொறுமையாக, நிதணமாகப் பதில் சொல்கிறார்கள்.

"ஜென்டில்மேன்" பாணி ஏழைகளுக்கு உதவும் ஹீரோ. "ரமணா''வின் ஹீரோ நெட்வொர்க், "சிவாஜி''யின் கருப்புப் பணம் களவாடுவது, "அந்நியன்'' ஹீரோ அவதாரம் என சூப்பர் டூப்பர் ஹிட்களை நினைவுபடுத்தும் ராபின்ஹூட் ஹீரோ கதை செய்திருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். சூப்பர் ஹீரோவாக விக்ரம் பறந்து பறந்து அடிப்பதற்கு டெக்ஜனாலஜியே காரணம் என்று லாஜிக் கற்பிக்கும் இடத்தில் மட்டும் அட சொல்ல வைக்கிறார் இயக்குனர்.

"அந்நியனா''கப் பரிச்சயமான கேரக்டர் என்றாலும், மனித சேவலாகவே கூவுவதும், தலையை வெடுக் வெடுக் கென்று திருப்பி நடப்பதுமாக கந்தசாமி குறை வைக்காமல் வீறு கொண்டு வித்தியாசப்படுத்துகிறார். அடிதடி சேஸிங், முரட்டுப்பிடி கிஸ்ஸிங் என மொத்தப் படத்தையும் குத்தகைக்கு எடுத்துப் பட்டாசு வெடிப்பது விக்ரம் மட்டுமே!

ஹாலிவுட் கேங்ஸ்டர் படங்களில் வில்லனின் ஆளாக ஹீரோவுடனேயே வளைய வரும் மேன்லி லுக் வில்லி கம் ஹீரோயின் போன்ற கேரக்டர் ஸ்ரேயாவுக்கு. சிலுப்பிய தலையும், ஒல்லிப்பிச்சு உடம்புமாக "அட! ஸ்ரேயா பொண்ணு கூட நடிக்கிதுப்பா!'' என்று சில இடங்களில் ஆச்சர்யம் கொடுக்கிறார். "உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு. நான் வெறும் டம்மி பீஸூ!'' என்று போலீஸ் ஸ்டேஷனில் மட்டுமே கலகலக்க வைக்கிறார் வடிவேலு.

சுவாரஸ்யமோ, எதிர்பார்ப்போ இல்லாத மெகா மகா நீள நீள காட்சிகள்தான் படத்தின் பலவீனம். ஒற்றை மனுஷியாக விக்ரமின் பின்னணியை ஸ்ரேயா கண்டுபிடிக்க, உளவுத்துறை போலீஸ் மட்டும் கடைசி வரை கந்தசாமி யார் என்று தேடிக் கொண்டே இருப்பது காமெடி. விக்ரம் கையில் சுத்தியல் இருக்கிறது என்பதற்காகவே அத்தனை கோடீஸ்வரர்களும் மாடி, வீட்டுச்சுவர், பஸ்பாடி என்று சுத்தியலால் உடைப்பதற்கு வாகான இடங்களிலேயே டாக்குமெண்ட், பணம் வைத்திருப்பதை என்னவென்று சொல்வதம்மா?

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அத்தனை பாடல்களும் அசத்தல் ரகம். ஏகாம்பரத்தின் கேமரா ஆக்ஷன் ஸீன்களில் சூப்பர் ஹீரோவுக்கு இணையாக காடு, மலை என சுற்றிச் சுழன்று உழைத்திருக்கிறது.

0 comments:

Post a Comment

Followers